இதனால் நயன்தாரா,ஆர்யா இடையே விரிசல் ஏற்பட்டது. இப்போது இருவரும் விழாக்களிலோ, வெளியிடங்களிலோ சந்தித்தால் பேசிக்கொள்வார்கள். ஆனால் இருவருக்கிடையே பழைய நட்பு இல்லை. இந்நிலையில் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்தது எனது அதிர்ஷ்டம் என சமீபத்தில் கூறியிருக்கிறார் ஆர்யா.
அத்துடன் அவர் நின்றுவிடவில்லை, நயன்தாரா எனது அதிர்ஷ்ட தேவதை என்றும் கூறியிருக்கிறார். இதனால் நயன்தாரா கோபமடைந்துள்ளார். நட்பே வேண்டாம் என்றுதான் செல்கிறேன்.
அதிர்ஷ்ட தேவதை எனக்கூறி எங்களுக்குள் நெருக்கம் இருப்பது போல் காட்டிக் கொள்ளப்பார்க்கிறார் ஆர்யா. தேவையில்லாமல் இவராகவே பத்திரிகைக்கு கிசு கிசு செய்தி சொல்கிறார் என தனக்கு நெருங்கியவர்களிடம் கூறி கோபமடைந்தார் நயன்தாரா.