Home கலை உலகம் ஆர்யா மீது நயன்தாரா கோபம்!

ஆர்யா மீது நயன்தாரா கோபம்!

505
0
SHARE
Ad

M_Id_400548_Nayantharaசென்னை, மார்ச் 11 – தன்னை அதிர்ஷ்ட தேவதை என கூறியதால் ஆர்யா மீது கடும் கோபத்தில் இருக்கிறார் நயன்தாரா. ராஜா ராணி படத்தில் நடித்தபோது நயன்தாராஆர்யா இடையே நல்ல புரிதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் நெருங்கி பழகினர். இதற்கிடையில் இரண்டாம் உலகம் படத்தின்போது அனுஷ்காவுடனும் ஆர்யா நட்பாக பழகியதால் நயன்தாரா கோபமடைந்தார்.

இதனால் நயன்தாரா,ஆர்யா இடையே விரிசல் ஏற்பட்டது. இப்போது இருவரும் விழாக்களிலோ, வெளியிடங்களிலோ சந்தித்தால் பேசிக்கொள்வார்கள். ஆனால் இருவருக்கிடையே பழைய நட்பு இல்லை. இந்நிலையில் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்தது எனது அதிர்ஷ்டம் என சமீபத்தில் கூறியிருக்கிறார் ஆர்யா.

அத்துடன் அவர் நின்றுவிடவில்லை, நயன்தாரா எனது அதிர்ஷ்ட தேவதை என்றும் கூறியிருக்கிறார்.  இதனால் நயன்தாரா கோபமடைந்துள்ளார். நட்பே வேண்டாம் என்றுதான் செல்கிறேன்.

#TamilSchoolmychoice

அதிர்ஷ்ட தேவதை எனக்கூறி எங்களுக்குள் நெருக்கம் இருப்பது போல் காட்டிக் கொள்ளப்பார்க்கிறார் ஆர்யா. தேவையில்லாமல் இவராகவே பத்திரிகைக்கு  கிசு கிசு செய்தி சொல்கிறார் என தனக்கு நெருங்கியவர்களிடம் கூறி கோபமடைந்தார் நயன்தாரா.