அதோடு முழுமையடையாமல் இருந்த அமலாபால் என்ற நடிகையை இப்படம் நூறு சதவிகிதம் ஒரு நடிகையாக்கியுள்ளது என்கிறார்.
அதற்கு முழுக்காரணம் இயக்குனர் சமுத்திரகனிதான். அதனால் இனிமேல் எந்தமாதிரியான வேடங்களிலும் நடிக்க முடியும் என்கிற தைரியம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
நிமிர்ந்து நில் படத்தில் எனது நடிப்பைப்பார்த்து தனது அடுத்த படத்திலும் என்னை நடிக்க வைக்கிறார் சமுத்திரகனி. அதோடு, அப்படத்தில் எனக்கு இரண்டு வேடம். அதனால் இதுவரையில்லாத நடிப்பை வெளிப்படுத்தி என்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
மேலும், நிமிர்ந்து நில் படம், உன்னை நீ சரி செய்து கொள். உலகம் தானாக சரியாகி விடும் என்ற கருத்து அடிப்படையில் உருவானதைப்போன்று அடுத்த படத்திலும் சமுதாயத்துக்கு தேவையான ஒரு முக்கியமான கருத்தை படமாக்குகிறார் சமுத்திரகனி.
அந்த கருத்து உலகையே திரும்பிப்பார்க்க வைப்பதாக இருக்கும். அதனால், ஒரு சிறப்பான படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கப் போகிறேன் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன் என்கிறார் அமலாபால்.