சென்னை, மார்ச் 24 – பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங், கட்சியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாகத் தெரிகின்றது. எல்.கே அத்வானியின் ஆதரவாளரான ஜஸ்வந்த்சிங், கட்சியிலிருந்து தான் ஓரங்கட்டப்படுவதாகக் கருதி இந்த முடிவை எடுத்துள்ளார், என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியிலிருந்த போது ராணுவம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றிய ஐஸ்வந்த்சிங், இந்த முறை தனது கடைசி தேர்தல் என்பதால், சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் பால்மர் தொகுதியில் போட்டியிட விரும்பம் தெரிவித்தார்.
ஆனால் கட்சி மேலிடம் அந்த தொகுதியை சமீபத்தில் காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் ராணுவ அதிகாரியான சோனாராம் சவுத்ரிக்கு கொடுத்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜஸ்வந்த்சிங், பா.ஜ.க. விலிருந்து விலகி, பாலமர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிகின்றன. இதற்கிடையே ஜஸ்வந்த் சிங்கிற்கு தேர்தலில் போட்டியிடத் தொகுதி வழங்காதது கவலையளிப்பதாக சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.