Home உலகம் தொழில்நுட்பக் கோளாறு: மாஸ் MH066 விமானம் ஹாங்காங்கில் அவசரமாக தரையிறக்கம்!

தொழில்நுட்பக் கோளாறு: மாஸ் MH066 விமானம் ஹாங்காங்கில் அவசரமாக தரையிறக்கம்!

547
0
SHARE
Ad

eGy3zqs-360கோலாலம்பூர், மார்ச் 24 – நேற்று இரவு 11.37 மணியளவில், கோலாலம்பூரில் இருந்து தென் கொரியாவின் இன்சியானை நோக்கி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் (MH066) விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஹாங்காங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இது குறித்து மாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானத்திற்கு மின் சக்தியை வழங்கும் ஜெனரேட்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. எனினும், துணைநிலை சாதனத்தில் இருந்து மின் சக்தி விமானத்திற்கு தொடர்ந்து கிடைத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் ஹாங்காங்கில் தரையிறக்கப்பட்டது குறித்து கருத்துரைத்துள்ள அந்நாட்டு விமான நிலையப் பிரதிநிதி, தகவல் கிடைத்த 30 நிமிடங்களில், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இதை அவசரமாக தரையிறக்கப்பட்டதாகக் கருத முடியாது. ஆனாலும் அவசரகால நடவடிக்கைகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 6.50 மணிக்கு தென் கொரியாவின் இன்சியானில் தரையிறங்க வேண்டிய விமானம், ஹாங்காங்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால், அதில் இருந்த 271 பயணிகளும் வேறு ஒரு மாற்று விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி, 239 பேருடன் மாயமான மாஸ் MH370 விமானத்தினை தேடும் பணி நடைபெற்று இன்று வரையில் நடைபெற்று வருகின்றது.

இதனிடையே, நேற்று முன்தினம் நேபாள் காட்மண்டு விமான நிலையத்தில் இரவு 10.45 மணியளவில் தரையிறங்கிய மாஸ் விமானம், ஓடும் பாதையில் வாத்துக் கூட்டத்தினை மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் விமானத்திற்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.