இந்நிலையில், ரொட்டி அதிகம் சாப்பிட்டால் உடலில் உப்பு அதிகரிக்கும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது. இந்த மையம் மக்களின் உணவு பழக்கம் குறித்து விரிவான கருத்து கணிப்பு நடத்தி உள்ளது.
அவர்களை பரிசோதனை செய்ததில் 10 பேரில் 9 பேருக்கு உப்பின் அளவு மிக அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது. அதற்கு ரொட்டிதான் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தினமும் சிற்றுண்டியாக ரொட்டி, உருளைக் கிழங்கு சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றை அவர்கள் சாப்பிட்டு வந்துள்ளனர். இதுவே உடலில் உப்பு அதிகரித்துள்ளதற்கு காரணம் என்பதை உறுதிப்படுத்தினர்.
உருளைக் கிழங்கு சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது ரொட்டியில் மட்டுமே உப்பு அதிகம் உள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஒரு ரொட்டியில் 230 மி.கிராம் உப்பு உள்ளது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பிட்சா, சீஸ், பாஸ்தா உணவுகளிலும் உப்பின் அளவு அதிகம். இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உப்பின் அளவு அதிகரித்து உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படும். எனவே, இவற்றை தொடர்ந்து சாப்பிட கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.