பிரிட்டன்: சிறு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கட்டுப்படுத்தப்பட்ட அளவு சீனி கொடுப்பதுடன், அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
குழந்தைகள் குறைந்தளவு சீனி உண்பதை உறுதி செய்யும் பெற்றோர்கள், அதே நேரத்தில் கசப்பு சுவையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று ராயல் காலேஜ் ஆப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த் (Royal College of Paediatrics and Child Health (RCPCH) பரிந்துரை செய்துள்ளது.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், பற்சிதைவு, மோசமான உடல்நிலை மற்றும் உடற்பருமனிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும்.
அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளதை விட அதிகளவு சீனி கலக்கப்படுகிறது என்றும், இது மருந்து மற்றும் பழச்சாறுகளுக்கும் பொருந்தும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.