இளைய அமைச்சரவை அமைச்சராக இருக்கும் சைட் சாதிக், இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இந்த திருத்தத்தை முன்வைத்தார்.
தற்போது, இந்தச் சட்டத்தின் பிரிவு 2 கீழ் இளைஞர்கள் 15 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என வரையறுக்கப்படுகிறார்கள்.
30 வயதிற்கு உட்பட்டவர்களே ‘இளைஞர்கள்‘ என்ற வரையறை மலேசிய இளைஞர் கொள்கையிலும் அனைத்துலக தரத்திற்கு ஏற்பவும் அமைக்கப்பட்டுள்ளது என்று திருத்த மசோதாவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த திருத்தத்தின் நோக்கம் இளைஞர்களுக்கு பதவி வகிக்க அதிக வாய்ப்புகளைத் திறப்பதும், மேலும் இளைய தலைவர்களை மெருகூட்டுவதும் ஆகும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிகபட்ச வயதைக் குறைப்பதன் மூலம், அதே சட்டத்தின் பிரிவு 15 கீழ் திருத்தப்பட்டு 30 வயதை எட்டும் போது பதவியில் இருக்கும் நபரின் தகுதி அகற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.