Home நாடு ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் விவகாரத்தில் அரசாங்கம் தைரியமாக செயல்பட வேண்டும்!

ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் விவகாரத்தில் அரசாங்கம் தைரியமாக செயல்பட வேண்டும்!

1005
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அம்ரி சே மாட் ஆகியோர் காணாமல் போன விவகாரம் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிக்குழு உறுப்பினர்களின் நியமனங்களைத் திருத்துவதற்கு உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின்  தயக்கம் காட்டுவது குறித்து ஓர் அரசு சாரா அமைப்பு விமர்சித்துள்ளது.

பொதுமக்கள் ஆட்சேபனையை அடுத்து, இந்த நடவடிக்கை பக்காத்தான் ஹாராப்பானின் மிகப்பெரிய தவறு என்று கேட்ஜ் (CAGED)அமைப்பு தெரிவித்துள்ளது.

மலேசியாவில் காவல் துறையினரின் அத்துமீறல்களை அரசாங்கம் தைரியமாக கையாள வேண்டும்”  என்று அது கூறியது.  காவல் துறையை அரசாங்கம் சீர்திருத்துமாறும் அது வலியுறுத்தியது.

#TamilSchoolmychoice

இதனிடையே, அண்மையில் ஆர்வலர் அம்ரி சே மாட் மற்றும் ரேய்மண்ட் கொ இருவரின் நிலை குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சால் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு பணிக்குழுவை அவர்களின் (அம்ரி சே மாட் மற்றும் ரேய்மண்ட் கொ) குடும்ப உறுப்பினர்கள் எதிர்த்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று அம்ரி சே மாட்டின் மனைவி நோர்ஹாயாதி முகமட் அரிபின் கூறியிருந்தார்.

காவல் துறையின் முன்னாள் சட்டப் பிரிவுத் தலைவர் மொக்தார் முகமட் நூர் இந்த சிறப்புக் குழுவில் நியமனம் செய்யப்பட்டதை அவர்கள் எதிர்த்துள்ளனர். மேலும், மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்விசாரணையில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் இதில் நியமிக்கப்பட வேண்டியதில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.