Home கலை உலகம் விஜய் நடனத்தை பார்த்து வியந்து போன சமந்தா!

விஜய் நடனத்தை பார்த்து வியந்து போன சமந்தா!

579
0
SHARE
Ad

28-vijay-samantha-600சென்னை, மார்ச் 28 – நடிகர் விஜயின் 57-வது படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளிவர இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘கத்தி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் விஜயின் நடனம் தனக்கு வியப்பையும், உற்சாகத்தையும் அளித்திருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சமந்தா. மேலும், இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

நடிகர் விஜயுடன் அவரது 57 வது படத்தில் நான் நடிக்கிறேன். ஹைதாராபத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அதில் நடிகர் விஜயுடன் ஒரு பாடலில் நான் நடனமாடினேன் அவருடன் நடனமாடும்போது எனக்கே வியப்பாக இருக்கிறது.

#TamilSchoolmychoice

அவரின் நடனம் எனக்கு உற்சாகத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது. படத்தில் வேகமான துடிப்புடன் நடனம் ஆடியுள்ளார் நடிகர் விஜய் என சமந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், முருகதாஸ்- விஜய் கூட்டணியில் படம் அமைந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளதாக மற்றொரு பதிவில் சமந்தா கூறியுள்ளார்.