Home இந்தியா மத்திய அமைச்சர் ஷிண்டேவுக்கு லாரி, டிராக்டருடன் ரூ.6 கோடி சொத்து!

மத்திய அமைச்சர் ஷிண்டேவுக்கு லாரி, டிராக்டருடன் ரூ.6 கோடி சொத்து!

401
0
SHARE
Ad

f98ef125-2613-467c-8409-79ac0ef71add_S_secvpfமும்பை, மார்ச் 28 – மத்திய, உள்துறை அமைச்சர், காங்கிரசை சேர்ந்த சுஷில்குமார் ஷிண்டேவுக்கு, 6 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரசை சேர்ந்த, முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான, மகாராஷ்டிர மாநிலத்தின், சோலாப்பூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து, மீண்டும் போட்டியிடும், சுஷில்குமார் ஷிண்டே, சமீபத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இங்கு, அடுத்த மாதம், 17ல், தேர்தல் நடக்கிறது. வேட்பு மனுவுடன் ஷிண்டே சமர்ப்பித்த, சொத்து பட்டியலில், டிராக்டர், லாரி, கார், பண்ணை வீடு, வீட்டு மனைகள் என, 6.18 கோடி ரூபாய்க்கு, தன்னிடம் அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அவர் மனைவி, உஜ்வாலாவுக்கு, 2.4 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறியுள்ளார். அது போல், மகாராஷ்டிராவை சேர்ந்த, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவாரின் மகளும்,

மகாராஷ்டிராவின், பாராமதி நாடாளுமன்றத் தொகுதியின், இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் அந்த தொகுதி, வேட்பாளருமான சுப்ரியா சுலே, தனக்கு, 32 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பாராமதி தொகுதியில், அடுத்த மாதம், 17ல் தேர்தல் நடக்கிறது. பா.ஜ.,வைச் சேர்ந்த, போஜ்பூரி மொழி நடிகர், மனோஜ் திவாரி, டில்லி கிழக்கு லோக்சபா தொகுதியில், போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த சொத்து பட்டியலில், தன் வசம், 14 கோடி ரூபாய்க்கு, அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.