Home கலை உலகம் ‘குக்கூ’ – இயக்குநருக்கு கார் பரிசு!

‘குக்கூ’ – இயக்குநருக்கு கார் பரிசு!

514
0
SHARE
Ad

06623805-09e7-4281-8018-fb85d1ae52041சென்னை, மார்ச் 28 – சமீபத்தில் வெளியான படங்களில் அனைவருடைய பாராட்டுக்களை பெற்றதுடன் மட்டும் அல்லாமல், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ள படம் ‘குக்கூ’.

இயக்குநர் லிங்குசாமியிடம் உதவியாளராக பணியாற்றி ராஜூமுருகன் இயக்கியுள்ள இப்படம், பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகளான நாயகன், நாயகிக்கு இடையே உள்ள காதல் படமாக உருவாகியுள்ளது.

அட்ட கத்தி படத்தின் நாயகன் தினேஷ், புதுமுகம் மாளவிகா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் தி நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், வெளியான நாள் முதல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘குக்கூ’ படக்குழுவினர் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, தயாரிப்பாளர் சண்முகம், இயக்குநர் ராஜுமுருகனுக்கு, ரெனால்ட் டஸ்ட்டர் கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

இயக்குநர் ராஜூமுருகன் பேசுகையில், “இந்த கார் பரிசு போன்றவையை நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் இது நடந்தது. இந்த படத்தை நான் எடுக்கும்போது, இது வசூல் ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன்.

அப்போது தான், இது போன்ற படங்கள் தொடர்ந்து எடுக்க முடியும். தற்போது குக்கூ படத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி, இதில் நடித்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் எனக்கு கொடுத்த வெற்றியாக எடுத்துக்கொள்கிறேன்.” என்றார் இயக்குநர் ராஜூமுருகன்.