Home உலகம் உக்ரைனில் மீண்டும் பதட்டம் – திடீரென ராணுவப் படைகளை அதிகரித்தது ரஷ்யா!

உக்ரைனில் மீண்டும் பதட்டம் – திடீரென ராணுவப் படைகளை அதிகரித்தது ரஷ்யா!

508
0
SHARE
Ad

northkorea-timeline-2006-articleLargeரஷ்யா, மார்ச் 28 – உக்ரைன் நாட்டில் இருந்து பிரிந்த கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்ட ரஷ்யா, கிரிமியாவில் உள்ள உக்ரைனின் இராணுவ மற்றும் கப்பற்படைத் தளங்களை ஒவ்வொன்றாக ஆக்கிரமித்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா திடீரென 30,000 திற்கும் அதிகமான ராணுவப் படைகளை குவித்து வருகிறது. இதனால் மேலும் பல பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமிக்க கூடும் என உக்ரைன் அஞ்சுகிறது.

எனவே அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை உக்ரைன் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட வருமாறு, அந்த நாடுகளுக்கு, உக்ரைன் கோரிக்கை வைத்துள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே ரஷ்யா, உக்ரைனின் கிழக்குப் பகுதிகள் மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் கைப்பற்றத் திட்டமிட்டிருப்பதாக, அமெரிக்காவின் புலனாய்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே உக்ரைனில் மீண்டும் பதட்டநிலை உருவாகியுள்ளது.