Home நாடு இன்று முதல் ‘தினக்குரல்’ பத்திரிக்கைக்கு பதிலாக ‘புதிய பார்வை’!

இன்று முதல் ‘தினக்குரல்’ பத்திரிக்கைக்கு பதிலாக ‘புதிய பார்வை’!

837
0
SHARE
Ad

Puthiya Paarvai 1st day 440 x 215கோலாலம்பூர், மார்ச் 28 – மலேசியாவில், வெளிவரும் 6 தமிழ் தினசரிகளில் ஒன்றான  ‘தினக்குரல்’ நாளிதழ், அரசாங்கத்தால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அந்தப் பத்திரிக்கை வெளிவருவது நிறுத்தப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சு விதித்த 3-மாதத் தடை உத்தரவுக்கு எதிராக அந்தப் பத்திரிக்கையின் நிர்வாகம் மேல்முறையீடு செய்திருப்பதாக அறியப்படுகின்றது.

இச்சூழலில், ‘தினக்குரல்’ நாளிதழுக்கு பதிலாக அதே கோணத்தில், அதே ஆசிரியர் குழுவினரைக் கொண்டு, புதிய நாளிதழான, ‘புதிய பார்வை’ என்ற பத்திரிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

புதிய பார்வையின் அனுமதியை மற்றொரு நிறுவனம் ஏற்கனவே  உள்துறை அமைச்சிடம் இருந்து பெற்று கைவசம் வைத்திருந்தது.

தற்போது தினக்குரல் தடை செய்யப்பட்ட நிலையில், தினக்குரல் பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவிற்கும் மற்றும் நிர்வாகம், மற்ற ஊழியர்களுக்கும் கைகொடுக்கும் விதமாக புதிய பார்வை பத்திரிக்கையை வெளிக் கொணர அதன் உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதாகவும் பத்திரிக்கை வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய பார்வையின் பின்னணியில் ம.இ.காவின் முக்கியத் தலைவர் ஒருவர் இருப்பதாகவும் பத்திரிக்கை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.