Home வணிகம்/தொழில் நுட்பம் அமெரிக்காவில் வோல்ஸ்வேகன் ரக கார்களின் விற்பனை தற்காலிக நிறுத்தம்!

அமெரிக்காவில் வோல்ஸ்வேகன் ரக கார்களின் விற்பனை தற்காலிக நிறுத்தம்!

697
0
SHARE
Ad

Volkswagen_Jetta_GLI_நியூயார்க், ஏப்ரல் 11 – ஜெர்மனியை சேர்ந்த பன்னாட்டு கார்கள் தயாரிப்பு நிறுவனமான வோல்ஸ்வேகன் (Volkswagen), தனது அமெரிக்க விநியோகஸ்தர்களிடம் ஜெட்டஸ் (Jettas), பச்சட்ஸ் (Passats) மற்றும் பீட்டில்ஸ் (Beetles) ரக கார்களின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துமாறு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வாசின் ஸ்காட் கூறுகையில், “VM கார்களில் குளிர்விப்பானையும், எரிபொருள் இணைப்பையும் இணைக்கும் O – வடிவ வளையத்தில் தொழில்நுட்பக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தீ-விபத்துகள் உண்டாகும் நிலை உள்ளதால், தற்சமயம் இக்கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் இரண்டுவார காலங்களுக்குள் களையப் படும்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த கார்களின் குறைபாடுகளினால் இதுவரை வாடிக்கையாளர்கள் பாதிபக்கப்படவில்லை என்றும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விற்பனை செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள  கார்களின் எண்ணிக்கை 25000 என்று கூறப்படுகிறது.