இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வாசின் ஸ்காட் கூறுகையில், “VM கார்களில் குளிர்விப்பானையும், எரிபொருள் இணைப்பையும் இணைக்கும் O – வடிவ வளையத்தில் தொழில்நுட்பக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தீ-விபத்துகள் உண்டாகும் நிலை உள்ளதால், தற்சமயம் இக்கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் இரண்டுவார காலங்களுக்குள் களையப் படும்” என்று கூறியுள்ளார்.
இந்த கார்களின் குறைபாடுகளினால் இதுவரை வாடிக்கையாளர்கள் பாதிபக்கப்படவில்லை என்றும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விற்பனை செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களின் எண்ணிக்கை 25000 என்று கூறப்படுகிறது.