Home India Elections 2014 முதல் முறையாக அந்தமானில் கற்காலத்தை சேர்ந்த பழங்குடியினர் வாக்களிப்பு!

முதல் முறையாக அந்தமானில் கற்காலத்தை சேர்ந்த பழங்குடியினர் வாக்களிப்பு!

718
0
SHARE
Ad

Tamil_Daily_News_43088495732போர்ட் பிளேர், ஏப்ரல் 11 – கற்காலத்தை சேர்ந்த பழங்குடியின மக்களில் கடைசி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் சோம்பென் மக்கள், முதல் முறையாக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

அந்தமான் நிக்கோர்பார் தீவுப்பகுதியில், சோம்பென், ஜாரவா, அந்தமானியர்கள், ஆங்கே, சென்டினெலஸ்சி ஆகிய பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் சோம்பென் இனத்தினர், கற்காலத்தை சேர்ந்த பழங்குடியினர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இக்காலத்தைச் சேர்ந்த, பழங்குடியின மக்களின் வாரிசுகள்தான் இவர்கள் என்று தெரியவந்துள்ளது. கடந்த 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, இவர்களின் மொத்த எண்ணிக்கையே 229 என்று தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

அந்தமானின், கிரேட் நிகோபார் எனப்படும் அடர்ந்த உள்ளடங்கிய காட்டுப்பகுதியில் இந்த இனத்தினர் வசிக்கின்றனர். மூங்கில்களால் கட்டப்பட்ட வீடுகள்தான் இவர்களின் வசிப்பிடம்.

மீன்களை வேட்டையாடுவது, தேன் சேகரிப்பது ஆகியவை தொழில், இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள், சாதாரணமாக வெளிவட்டாரங்களுக்கு வருவதில்லை.

நாகரீகத்தின் எந்த அடையாளமும் இல்லை. அதேபோல், தங்கள் இனத்தினரை தவிர பிறருடன் பழக்கம் வைத்து கொள்வதும் இல்லை.

இந்நிலையில், இந்த பழங்குடியினருக்கும் வாக்களிக்கும் உரிமையை அளித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி, இந்த இனத்தை சேர்ந்தவர்களுடன் பேசி, அவர்களுக்காகவே பிரத்யேக வாக்குச்சாவடி அங்கு அமைக்கப்பட்டது.

நேற்று அங்கு நடந்த தேர்தலில், சோம்பென் இனத்தைச் சேர்ந்த 60 பேர் தங்கள் வாக்குகளை வாக்குச்சீட்டு மூலம் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிரேட் நிகோபார் தீவில் தேர்தல் நடத்துவது என்றால் பெரும் சவால் நிறைந்த பணியாகும். என்று கிரேட்டர் நிகோபார் தீவுகளின் உதவி தேர்தல் அதிகாரி அகில் குமார் தெரிவித்தார்.