Home இந்தியா சபாநாயகரே ஓட்டு போடவில்லை!

சபாநாயகரே ஓட்டு போடவில்லை!

802
0
SHARE
Ad

d7c5a9ee-6349-48e6-ad00-665a8d9be03b_S_secvpfசசாராம், ஏப்ரல் 11 –  நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார், டில்லியில் நேற்று நடந்த தேர்தலில் ஓட்டளிக்கவில்லை. ’16-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், சபாநாயகரே ஓட்டளிக்காதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது’ என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முதல்வர், நிதிஷ்குமார் தலைமையிலான பீகாரின், சசாராம் நாடாளுமன்றத் தொகுதியில், தொடர்ந்து மூன்றாவது முறையாக, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மீரா,

டில்லிக்கு சென்று ஓட்டளிக்க தவறிவிட்டார். இந்த தொகுதியில் அவரின் தந்தை, மறைந்த, ஜெகஜீவன் ராம், 1952 முதல், 1984 வரை, எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.