Home உலகம் இங்கிலாந்தின் ராணுவம், நீதி அமைப்புகளில் சீக்கியர்களுக்கு பதவிகள் அளிக்கப்படும் – பிரதமர் டேவிட் கேமரூன்!

இங்கிலாந்தின் ராணுவம், நீதி அமைப்புகளில் சீக்கியர்களுக்கு பதவிகள் அளிக்கப்படும் – பிரதமர் டேவிட் கேமரூன்!

553
0
SHARE
Ad

10-1394451555-david-camerron-10-600இங்கிலாந்து, ஏப்ரல் 11 – இங்கிலாந்தின் ராணுவம், நீதி போன்ற ஒவ்வொரு அமைப்பிலும் சீக்கியர்களுக்கும் உயர்ந்த பதவிகள் அளிக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக லண்டனில், பிரதமர் அலுவலகம் உள்ள டௌனிங் தெருவில் நடைபெற்ற சீக்கியர்களின் வைசாகித் திருவிழாக் கொண்டாட்டத்தில் நான்காம் ஆண்டாக கலந்து கொண்ட அவர், சீக்கியர்களின் கடின உழைப்பைப் பாராட்டிப் பேசினார்.

அதேபோல் நாடாளுமன்றப் பணிகளிலும் சீக்கியர்களின் பங்கு அதிகரிக்கப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் நாட்டின் ஒவ்வொரு அமைப்பிலும் சீக்கியர்களுக்கும் உயர்ந்த பதவிகள் அளிக்கப்படும்.

#TamilSchoolmychoice

இதற்குக் காரணம் இங்கு பணியாற்ற வருபவர்கள் எங்கிருந்து வந்தாலும், தங்களின் திறமைகளைக் கொண்டு முன்னுக்கு வருகின்றனர்.

இங்கிலாந்தின் ராணுவம், அரசுத்துறை, வர்த்தகம், விளையாட்டு போன்ற அனைத்துத் துறைகளிலும் சீக்கியர்களின் பங்களிப்பு என்பது மகத்தானதாக இருக்கின்றது என்பதை கேமரூன் தனது உரையில் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட பெருமழை மற்றும் வெள்ள காலத்தில் சீக்கியர்களின் அயராத பணி பற்றியும், சமூகத்தினை ஒருங்கிணைப்பதுவும், பணியாற்றுவதும் இங்கிலாந்துவாழ் சீக்கியர்கள் அனைவரிடமும் காணப்படுகின்றது என்று டேவிட் கேமரூன் பெருமையுடன் குறிப்பிட்டார்.

வரும் 2015ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் சீக்கியர்களின் ஓட்டு வங்கி ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் என்று விமர்சகர்கள் ஆருடம் தெரிவிக்கின்றனர்.