Home Featured உலகம் இனி பிரதமர் இல்லை! கேமரூனின் ஜாலி குளியல்!

இனி பிரதமர் இல்லை! கேமரூனின் ஜாலி குளியல்!

1094
0
SHARE
Ad

david cameron-wife-holiday-

இலண்டன் – பிரிட்டன் பிரதமராகப் பதவி வகித்த டேவிட் கேமரூன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பொதுவாக்கெடுப்பில் பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து, தனது பதவியிலிருந்து விலகினார். தற்போது தனது குடும்பத்தினருடன் ஜாலியாக பொழுதைக் கழித்து வருகின்றார் கேமரூன்.

கொர்சிகா பகுதியிலுள்ள ஆடம்பர தங்கும் விடுதியில் தங்கியிருக்கும் கெமரூன் அவரது மனைவி சமந்தா கெமரூனுடன் ஜாலியாகக் கடல் குளியல் போடும் காட்சிகளை பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன.

#TamilSchoolmychoice

படங்களை வைத்துப் பார்க்கும்போது கேமரூன் லேசாகத் தொப்பை போட்டுள்ளதாகவும், ஆனால் அவரது மனைவி இன்னும் கட்டுடலோடு திகழ்வதாகவும் வர்ணித்துள்ளன பிரிட்டிஷ் பத்திரிக்கைகள்.

கேமரூன் போட்டிருக்கும் அரை காற்சட்டை 225 பவுண்டுக்கு வாங்கப்பட்டது என்பது வரை பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் கண்டு பிடித்து எழுதியுள்ளன.