Home Featured கலையுலகம் “கர்டாஷியன்ஸ்” அம்மாவுக்கு கார் விபத்தில் காயம்!

“கர்டாஷியன்ஸ்” அம்மாவுக்கு கார் விபத்தில் காயம்!

839
0
SHARE
Ad

KRIS-JENNER-kardashiansலாஸ் ஏஞ்சல்ஸ் – உலகம் முழுவதும் உள்ள தொலைக்காட்சி இரசிகர்களையும், ஏன் உள்நாட்டிலும் கூட இலட்சக்கணக்கான இரசிகர்களைக் கவரும் தொடர் ‘கர்டாஷியன்ஸ்’.

பிரபல விளம்பர அழகி (மாடல்) கிம் கர்டாஷியனையும் அவரது குடும்பத்தினரையும் மையமாக வைத்து அவர்களின் நிஜ வாழ்க்கை சம்பவங்களை கவர்ச்சியானத் தொடராகக் காட்டுவது இந்த தொலைக்காட்சித் தொடர்.

இந்தத் தொடரில் தனது அழகான பெண்களுக்கு விளம்பர உலகின் நுணுக்கங்களைக் கற்றுத் தருவதோடு, அவர்களுக்கு வழிகாட்டுவது 60 வயதான அவர்களின் தாயார் கிரிஸ் ஜென்னர் (படம்).

#TamilSchoolmychoice

இன்று லாஸ் ஏஞ்சல்சில் அவர் சென்ற ரோல்ஸ் ராய்ஸ் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இருப்பினும் அவர் நலமாக உள்ளார் என்றும் அவருக்கு கைமுறிவு ஏற்பட்டிருக்கலாம், அதே சமயம் கார் விபத்தால் அதிர்ச்சி அடைந்திருந்தார் என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவரது மகள்களில் ஒருவரான கய்லி கர்டாஷியன் தனது தாயார் நலமுடன் இருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கிரிஸ் ஜென்னர் சென்ற காரின் முன்பகுதி மோசமாக நசுங்கியுள்ளது. அந்தப் புதிய காரை அவர் வாங்கி ஒரு வாரம்தான் ஆகிறது என்றும் கூறப்படுகின்றது.