Home Featured கலையுலகம்  “பாலியல் கொடுமை செய்வார்களோ என பயந்தேன்” – கொள்ளை சம்பவம் குறித்து கிம் கர்டாஷியன்!

 “பாலியல் கொடுமை செய்வார்களோ என பயந்தேன்” – கொள்ளை சம்பவம் குறித்து கிம் கர்டாஷியன்!

857
0
SHARE
Ad

kim-kardashian-jpg-feature

லாஸ் ஏஞ்சல்ஸ் – பாரிஸ் நகரில் மில்லியன் கணக்கான விலையுயர்ந்த நகைகளைக் கொள்ளை சம்பவத்தில் பறிகொடுத்து விட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்பியுள்ளார் தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்டாஷியன்.

அந்த கொள்ளை சம்பவத்தைப் பற்றி விவரித்துள்ள அவர், கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் தன்னை மடக்கியபோது, குளித்து முடித்து உடுத்தும் வெறும் மேலாடையுடன் இருந்ததாகவும், வந்தவர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப் போகின்றார்கள் என அஞ்சி, படுக்கையில் புகுந்து போர்வையால் தன்னைப் போர்த்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார். உடனே, தனது பிரத்தியேக பாதுகாவலரையும் அழைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே காமத் தொல்லை

kim-kardashian-courtney-kardashian-parisகிம் கர்டாஷியன் தனது தங்கை கோர்ட்னி கர்டாஷியனுடன் – பாரிஸ் அலங்கார அணிவகுப்பில்….

தனது உடலழகையும், அந்தரங்கங்களையும் வெளிச்சமாக்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருபவர் கிர் கர்டாஷியன். அதன் காரணமாக, அவரது உடலழகை இரசிப்பவர்களால் அவருக்கு தொல்லைகளும் ஏற்பட்டிருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்னர்தான் கிம் உணவகம் ஒன்றுக்கு சென்றபோது, அங்கு ஒருவன் அவரை நெருங்கி அவரது பிட்டத்தை (பின்பக்கத்தை) முத்தமிட முயன்றிருக்கின்றான். பின்னர் அவன் பாதுகாவலர்களால் மடக்கப்பட்டான்.

இதற்குப் பிறகுதான் பாரிஸ் கொள்ளை சம்பவம் நடந்திருக்கின்றது.

கிம் தங்கியிருந்த இரண்டு தளங்களைக் கொண்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸ் உடையில் நுழைந்த கொள்ளையர்கள், முதலில் கிம் கையில் இருந்த கைத்தொலைபேசியைப் பிடுங்கியிருக்கின்றனர்.

பின்னர் அவரைப் பிளாஸ்டிக் விலங்குகளைக் கொண்டு கட்டிப் போட்டுவிட்டு, அவரது வாயையும் பிளாஸ்டர்களைக் கொண்டு ஒட்டியிருக்கின்றனர் என ஹாலிவுட்டின் சினிமா உலக விவகாரங்களை விவரிக்கும் டிஎம்ஸெட் என்ற பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

kim-kardashian-twitterகிம் கர்டாஷியனின் கவர்ச்சித் தோற்றம்….

அந்த சமயத்தில் கொள்ளையர்களில் ஒருவன் கிம் கர்டாஷியனின் கணுக்கால்களைப் பிடித்திருக்கின்றான். அந்த சமயத்தில்தான் தன் மீது பாலியல் கொடுமை நிகழ்த்தப்படுமோ என கிம் அஞ்சியிருக்கின்றார்.

ஆனால், வந்தவர்களோ, அவர் மீது காமம் கொண்டிருக்கவில்லை. மாறாக, அவரது நகைகளின் மீதுதான் காதல் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ‘மோதிரம், மோதிரம் (ring…ring…)’ என்று மட்டும் அவர்கள் கூறியிருக்கின்றனர். அவரது கணவர் கேன்யே வெஸ்ட் அளித்திருந்த விலையுயர்ந்த மோதிரத்தைக் குறி வைத்துத்தான் அவர்கள் அவரது குடியிருப்புக்குள் நுழைந்திருக்கின்றனர். கொள்ளையர்கள் ஆங்கிலத்தில் உரையாடவில்லை என்றும் கிம் கூறியிருக்கின்றார்.

மொத்தம் 5 கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் கூட்டாக ஈடுபட்டனர் என்பதும் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நிர்வாக அமைப்பில் அல்லது அங்கு பணிபுரிபவர்கள் கொடுத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில்தான் கொள்ளை சம்பவம் அரங்கேறியிருக்கின்றது என விசாரித்து வரும் பிரான்ஸ் காவல் துறையினர் நம்புகின்றனர்.

கீழ்மாடியில், தங்கியிருந்த கிம்மின் நண்பர் ஒருவர் பின்னர் ஆபத்தை உணர்ந்து கிம்மின் சகோதரி கோர்ட்னி கர்டாஷியனை அழைத்து, அவரது பாதுகாவலரோடு, வரச்சொல்லியிருக்கின்றார்.

ஆனால், அதற்குள் இரண்டே நிமிடங்களில் கொள்ளை சம்பவம் நடந்து முடிந்து விட்டது.