Home Featured கலையுலகம் ஹனுமான் – பிரம்மாண்ட நாட்டிய நாடகம்! இன்றும் நாளையும் கேடிஎம் உள்ளரங்கில்!

ஹனுமான் – பிரம்மாண்ட நாட்டிய நாடகம்! இன்றும் நாளையும் கேடிஎம் உள்ளரங்கில்!

759
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ‘நடுவன்’, ‘தசமஹவித்யா’, ‘மீண்டும் சக்தி’, ‘சிலப்பதிகாரம்’ போன்ற நாட்டிய நாடகங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அஜண்டா சூரியா கம்யூனிகேசன், தார்மிக் பவுண்டேசன் ஆகியவற்றின் ஆதரவுடன், அடஸ்தா நெட்வொர்க் மற்றும் ஆஸ்தானா ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் புதிய பிரம்மாண்டப் படைப்பு, ‘ஹனுமான்’ (பன்மடங்கு ஆற்றல் கொண்ட வலுவான சக்தி)

ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கு உதவும் மகத்தான சக்தியையும் எடுத்துரைக்கும் இந்த நாட்டிய நாடகம் இன்று அக்டோபர் 8-ம் தேதி, சனிக்கிழமை மற்றும் அக்டோபர் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் மாலை 7 மணியளவில், தலைநகர் ஜாலான் டூத்தாவிலுள்ள, கேடிஎம் உள்ளரங்கில் நடைபெறுகின்றது.

hanuman1இந்த பிரம்மாண்டமான நாட்டிய நாடகத்தின் கலை இயக்குநராக ரே.மூவேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். துணை கலை இயக்குநராக ரித்தாவுடின் அப்துல் காதர் பணியாற்றியுள்ளார். திரைக்கதை மற்றும் தொகுப்பாளராக குணசீலன் சிவக்குமார், பொதுஉறவு, விளம்பரம் மற்றும் ஊடகத் தொடர்பு அதிகாரியாக அரசு கணிமொழி ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

மேலும், அஸ்வினி ஜெயபாலன், ரே.மூவேந்திரன், விக்ரம், நந்தகுமார் ஆகியோர் நடன அமைப்புகளையும், கண்ணன் ராஜமாணிக்கம், அழகரசன் அழகன் ஒப்பனையையும், ஆடை வடிவமைப்பை ஜோஷுவா ஆகியோரும் உருவாக்கியிருக்கின்றனர்.

மேலும், இந்த நாட்டிய நாடகங்கத்தில் 10-த்திற்கும் மேற்பட்ட மலேசிய நடிகர்களும், 20-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களும் பணியாற்றியிருக்கின்றனர். மொத்தமாக கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்.

‘வெட்டிங் ஃபீவர்’ மாடல் நிவேசன் கணேசன் ஹனுமான் வேடம் ஏற்றிருப்பதோடு, சீதை வேடத்தை அலிண்டா அல்போன்ஸ், டாக்டர் இந்திராணி ஆகியோர் ஏற்றிருக்கின்றனர். ‘கிரேட் அண்ட் கோல்ட்’ நடனக்குழுவின் தலைவர் இராயப்பன் இராவண வேடம் ஏற்றிருக்கிறார்.

ஆண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும்

raviவீரா, சஞ்சீவன், மாருதி மற்றும் இனேஸ் ஆகியோர் தங்கள் வாழ்வில் பல தோல்விகளையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார்கள். ஹனுமான் என்ற மாபெரும் சக்தியை உணர்ந்து அவர்கள் எப்படி தங்கள் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்பதை கலை நயத்துடன் நாட்டிய நாடகமாக வழங்கியிருப்பதாக ஆஸ்தானா தலைவர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

‘சிலப்பதிகாரம்’, ‘தசமஹவித்யா’, ‘மீண்டும் சக்தி’ போன்ற பெண்களின் மகிமையைப் போற்றும் நாட்டிய நாடகங்களுக்குப் பிறகு, ஆஸ்தானாவின் 25-வது படைப்பாக, ஆண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஹனுமான் உருவாக்கப்பட்டுள்ளதாக ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

இசை 

இந்த அற்புதமான நாட்டிய நாடகத்திற்கு ‘ஜெய் ஹனுமான்’ என்ற கருப்பொருளில் பாடல் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. கேட்பவர்களைப் பரவசப்படுத்தும், தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமான இசையை பாலன்ராஜ் உருவாக்கியுள்ளார். அவருக்கு உறுதுணையாக எம்.ஜெகதீஸ் இசைக் கோர்ப்புப் பணிகளை மிகச் சிறப்பாக செய்துள்ளார். ஃபீனிக்ஸ்தாசன் வரிகள் எழுதியுள்ள இப்பாடலை, அஸ்ட்ரோ வானவில் சூப்பர் ஸ்டார் புகழ் நட்சசத்திரங்களான கணேசன் மனோகரன், அலிண்டா அல்போன்ஸ் ஆகிய இருவரும் தங்களின் காந்தக் குரலால் அற்புதமாகப் பாடியுள்ளனர்.

கலை ரசிகர்கள் தவற விடக்கூடாத படைப்பு

hanuman2ஆஸ்தானா அனைத்துலக கலைக்கூட மையத்தை உருவாக்க நிதிதிரட்டும் நோக்கத்துடன் இந்த பிரம்மாண்ட படைப்பு அரங்கேறுகின்றது.

ஆண்களுக்குத் தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் அளிக்கும் வகையில் கலைநயத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த அற்புதமான படைப்பு கலை ரசிகர்கள் தவறவிடக் கூடாத ஒன்று.

இன்று அக்டோபர் 8-ம் தேதி, சனிக்கிழமை மற்றும் அக்டோபர் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் மாலை 7 மணியளவில், தலைநகர் ஜாலான் டூத்தாவிலுள்ள, கேடிஎம் உள்ளரங்கில் நடைபெறவுள்ள இந்த ‘ஹனுமான்’ நாட்டிய நாடகத்தைக் காண கீழ்காணும் எண்களைத் தொடர்பு கொண்டு அழைப்பிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அழைப்பிதழ்கள் 30 ரிங்கிட் (மாணவர்களுக்கு மட்டும்), மற்றவர்களுக்கு 50 ரிங்கிட் மற்றும் 100 ரிங்கிட் விலையில் அழைப்பிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புக்கு: குமுதவாணி (016-7139279), லக்‌ஷ்மேஸ் (016-2955653)