Home கலை உலகம் பிரபுதேவாவின் இரவு விருந்து – நயன்தாராவிற்கு அழைப்பு இல்லை!

பிரபுதேவாவின் இரவு விருந்து – நயன்தாராவிற்கு அழைப்பு இல்லை!

503
0
SHARE
Ad

08-prabhudeva-party-1-600சென்னை, ஏப்ரல் 11 – போக்கிரி, வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவா, பின்னர் பாலிவுட் படங்களை இயக்க தொடங்கினார். இதையடுத்து சென்னையிலிருந்து தனது குடியிருப்பை காலி செய்துவிட்டு மும்பையில் குடியேறினார்.

அவ்வப்போது தனது குடும்பத்தினரை சந்திக்க சென்னை வந்து சென்றார். பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்ததால் கோலிவுட் நட்சத்திரங்களுக்கிடையேயான நட்பில் இடைவெளி ஏற்பட்டது. அதை புதுப்பித்துக்கொள்ள முடிவு செய்தார் பிரபுதேவா.

இரண்டு தினங்களுக்கு முன் சென்னை வந்த பிரபுதேவா, தனது கோலிவுட் நண்பர்கள் மற்றும் நாயாகிகளுக்கு அழைப்பு விடுத்து இரவு விருந்து கொடுத்தார்.

#TamilSchoolmychoice

இதில் இயக்குநர் ஷங்கர், நடிகர் விஜய், சித்தார்த், விஷால், ஜெயம் ரவி, நடிகைகள் மீனா, லட்சுமிராய், சங்கீதா, வரலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆனால் மாஜி காதலி நயன்தாராவுக்கு அழைப்பு அனுப்பாமல் புறக்கணித்தார் பிரபு தேவா.

சக நண்பர்கள், தோழிகளுக்கு பிரபுதேவா தடபுடல் விருந்தளித்தது குறித்து அறிந்த நயன்தாரா தான் புறக்கணிக்கப்பட்டதை எண்ணி வருத்தப்பட்டாராம். அந்த வேதனையை தோழிகளிடம் பகிர்ந்துகொண்டாராம்.