Home தொழில் நுட்பம் சோனி ‘வையோ ஃபிட் 11ஏ’ மடிக்கணினியில் தீ பற்றும் அபாயம் – சோனி எச்சரிக்கை

சோனி ‘வையோ ஃபிட் 11ஏ’ மடிக்கணினியில் தீ பற்றும் அபாயம் – சோனி எச்சரிக்கை

639
0
SHARE
Ad

Sonyஏப்ரல் 12 – ஜப்பானைச் சேர்ந்த  பிரபல கணிப்பொறி தயாரிப்பு நிறுவனமான ‘சோனி’ (Sony) தாங்கள் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்த புதிய ‘வையோ ஃபிட் 11ஏ’ (Vaio Fit 11A) மடிக்கணினியின் மின்கலன் (battery) அதிக அளவில் சூடாகும் பிரச்சினை உள்ளதால் பயனர்கள் அதன் பயன்பாட்டை நிறுத்துமாறு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய வையோ பிட் 11ஏ மடிக்கணினியின் மின்கலனில் தீவிபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், தாங்கள் விற்பனை செய்துள்ள 26,000 சாதனங்களையும் திரும்பப் பெற உள்ளதாகவும், அதுவரை பாதுகாப்பு கருதி பயனாளர்கள் அவற்றை உபயோகப்படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளது. இந்த புதிய வையோ பிட் 11ஏ வை, மடிக்கணினியாகவும், பாரம்பரியமான கணிப்பொறி வடிவிலும் உபயோகப்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பாகும்.

இந்த மடிக்கணினிகள், இதுவரை 25,905 சாதனங்கள் உலகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் சில வாரங்களுக்குள் பழுது பார்த்தல் உட்பட மேலும் பல விபரங்களை வெளியிடுவதாகவும் சோனி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த மடிக்கணினியில் உபயோகப்படுத்தப்படும் லித்தியம் அயான் மின்கலன் ‘பானாசோனிக்’ (Panasonic) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.