டெல்லி, ஏப்ரல் 12 – 2009-ல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு தன்னுடைய திறமை என பிரதமர் மன்மோகன்சிங் கற்பனையில் இருந்தார். அந்த கற்பனையில் புதிய அமைச்சர்களை தனது அமைச்சரவையில் அமர்த்த விரும்பினார்.
அதன் அடிப்படையில் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜனை நிதியமைச்சராக நியமிக்க முடிவு செய்திருந்தபோது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, என்னிடம் கலந்து ஆலோசனை செய்யாமல் தனது விருப்பம் போல் பிரணாப் முகர்ஜியை நியமித்தார்.
இதனை பிரதமரின் முன்னாள் ஆலோசகர் சஞ்சய பாரு எழுதிய தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர், தி மேக்கிங் அண்ட் அன்மேக்கிங் ஆப் மன்மோகன் சிங் என்ற புத்தகத்தில் எழுதி இருந்தது தற்போது பரபரப்பான தகவலாக தெரியவந்துள்ளன.