Home உலகம் அமெரிக்க மாணவர்களை வகுப்பறைக்குள் புகுந்து கத்தியால் குத்திய 16-வயது சிறுவன்!

அமெரிக்க மாணவர்களை வகுப்பறைக்குள் புகுந்து கத்தியால் குத்திய 16-வயது சிறுவன்!

615
0
SHARE
Ad

katநியூயார்க், ஏப்ரல் 11 – அமெரிக்காவில் உள்ள பீட்ஸ்பர்க் நகரில், பிராங்க்ளின் மண்டல உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 16 வயது மாணவன் ஒருவன், பள்ளி வகுப்பறை ஒன்றினுள் புகுந்து அங்கிருந்த மாணவர்களை சரமாரியாக கத்தியால் குத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், “அலெக்ஸ் ஹாரிபால் என்ற மாணவன், 8 முதல் 10 அங்குல கத்திகள் இரண்டை வைத்துக் கொண்டு, திடீரென்று வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்களை கத்தியால் குத்தினான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் தப்பி ஓடினார்கள். அவர்களை விரட்டிசென்று குத்தினான். பள்ளி காவலர்கள் அந்த மாணவனை பிடிக்க முயன்றனர். அவர்களில் ஒருவரையும் கத்தியால் குத்தினான் அவன்.

#TamilSchoolmychoice

இதில் 22 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஒரு காவலாளியும் காயம் அடைந்தார். கடும் போராட்டத்துக்கு பிறகு காவலாளிகளும், உதவித் தலைமை ஆசிரியரும் அந்த மாணவனை மடக்கி பிடித்தனர்.

காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று கூறினர்.

மாணவனின் இந்த கொடுஞ்செயல் பற்றி விரிவான காரணங்கள் தெரியாத நிலையில், சம்பவம் நடந்ததற்கு முன்தினம், அவன் வேறொரு மாணவனால் தொலைபேசியில் மிரட்டப்பட்டான் என்று பள்ளி வட்டாரங்கள் கூறுகின்றன.

அமெரிக்காவில் 40 மில்லியன் இளம் வயதினர், Anxiety disorder எனும் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.