Home கலை உலகம் உதயநிதிக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்!

உதயநிதிக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்!

682
0
SHARE
Ad

Sundarapandian-actress-Lakshmi-menon-12சென்னை, ஏப்ரல் 12 – கோடம்பாக்கத்தின் அதிர்ஷ்ட நாயகியான லட்சுமி மேனன், அடுத்து ஜோடி சேரப் போவது உதயநிதி ஸ்டாலினுடன். இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து உதயநிதி நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஏ.ஜெகதீஷ் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார் உதயநிதி. அதில் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் லட்சுமிமேனன். இந்த படத்தை இது கதிர்வேலன் காதல் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனே இயக்குகிறார்.

#TamilSchoolmychoice

இந்த படத்துக்கு இசை உதயநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் அல்ல. இந்தப் படத்தில் அனிருத்துக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளார்களாம். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் படத்தில் சந்தானம் இருக்கிறாராம். உதயநிதியே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.