Home உலகம் லண்டனிலுள்ள இந்திய வம்சாவளியினர் மோடிக்கு எதிராக கடிதம்!

லண்டனிலுள்ள இந்திய வம்சாவளியினர் மோடிக்கு எதிராக கடிதம்!

506
0
SHARE
Ad

modi2_1598726gலண்டன், ஏப்ரல் 23 –  உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களாக ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ், ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் திகழ்கின்றன. லண்டனிலுள்ள இந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 75 பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மோடிக்கு எதிராக பகிரத கடிதம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பேராசிரியர் சீட்டன் பாட் மற்றும் கௌதம் அப்பா தலைமையிலான கல்வியாளர்கள் குழு, லண்டனின் ‘இன்டிபென்டன்ட்’ நாளிதழில் இந்த பகிரங்க கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.

அக்கடித்தில், “சிறுபான்மை மக்களுக்கு எதிராக மாபெரும் வன்முறைகளை இழைத்த வரலாறு கொண்ட இந்துத்துவ இயக்கமான ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க் பரிவார் குழுக்களுடன் இணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவர்  நரேந்திர மோடி. அவரின் தலைமையிலான பா.ஜ.க. அரசு இந்திய ஜனநாயகத்தையும், மத ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்தவே செய்யும்.”

#TamilSchoolmychoice

“இந்திய மக்கள் அடுத்த அரசை தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்க உள்ள இந்த நேரத்தில், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் மதவாதம் குறித்த நரேந்திர மோடியின் ஞாயங்கள் எங்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதானால் ஏற்படயிருக்கும் விளைவுகள் குறித்து எங்களுக்கு பெரும் அச்சம் ஏற்படுகின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இம்மாத தொடக்கத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தலைமையிலான சிலர் ‘கார்டியன்’ நாளிதழுக்கு இதேபோல் மோடிக்கு எதிராக பகிரங்க கடிதம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.