சென்னை, ஏப்ரல் 24 – தமிழகத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 16-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறுகையில்,
“தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடந்து முடிந்த தேர்தலில் சராசரியாக 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அனைத்து ஓட்டுச்சாவடிகளில் இருந்தும் முழுமையான ஓட்டுப்பதிவு குறித்த தகவல் கிடைத்தவுடன், தொகுதிவாரியாக ஓட்டுசதவீதம் குறித்த அறிவிப்பு, நாளை (ஏப்ரல் 25) அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார் .
தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி சராசரி 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 79.32 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவிகித விவரம்:
திருவள்ளூர்-70.04, வடசென்னை-60.29, தென்சென்னை-56.84, மத்திய சென்னை-59.42, ஸ்ரீ பெரும்புதூர்-59.24, காஞ்சிபுரம்-64.53, அரக்கோணம்-74.37, வேலூர்-70.3, கிருஷ்ணகிரி-74.35, தர்மபுரி-79.32
திருவண்ணாமலை-74.03, ஆரணி-77.74, விழுப்புரம்-74.69, கள்ளக்குறிச்சி-75.62, சேலம்-74.35, நாமக்கல்-76.39, ஈரோடு-73.54, திருப்பூர்-72.78, நீலகிரி-69.77, கோவை-66.15
பொள்ளாச்சி-71.06, திண்டுக்கல்-75.1 கரூர்-77.74, திருச்சி-67.63, பெரம்பலூர்-75.42, கடலூர்-76, சிதம்பரம்-76.39, மயிலாடுதுறை-67.63, நாகப்பட்டினம்-73.2, தஞ்சை-71.96
சிவகங்கை-69.82, மதுரை-62.65, தேனி-68.24, விருதுநகர்-70.39, ராமநாதபுரம்-65.8, தூத்துக்குடி-67.1, தென்காசி-71.07, திருநெல்வேலி-66.33, கன்னியாகுமரி-65.29 சதவிகித வாக்குகள் பதிவாகின. புதுச்சேரி தொகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இடைத்தேர்தல் நடைபெறும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 62 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.