எனவே, அங்குள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எம்.பி.க்களும் அங்கு வந்து வாக்குப் பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது நாடாளுமன்றத்திற்குள் திடீரென ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
துப்பாக்கி சண்டையின் இறுதியில் நாடாளுமன்றத்தை சுற்றிய வளாகங்களை மர்ம நபர்கள் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து பிரதமர் தேர்தல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எம்.பி.க்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
நாடாளுமன்றம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலின் காரணமாக லிபிய நாடாளுமன்ற வட்டாரங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.