இதில் டாசில் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச தீர்மானித்தார். முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 156 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூர் அணி ஆடியது. 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் திரட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.
சொந்த ஊரில் ஆடிய முதல் ஆட்டத்திலேயே வெற்றிக்கனியை பறித்து இருக்கிறது. அதே சமயம் 6-வது ஆட்டத்தில் விளையாடிய ஐதராபாத்துக்கு இது 4-வது தோல்வியாகும்.