Home உலகம் சிரியாவின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வருகின்றது! 

சிரியாவின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வருகின்றது! 

568
0
SHARE
Ad

09-sryia34-600ஹோம்ஸ், மே 10 – சிரியாவில் ஷியா பிரிவு அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்ப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள், கடந்த 3 வருடங்களாக சண்டையிட்டு வருகின்றன. அரபு வசந்தம் என்ற பெயரில் வெடித்த இந்த புரட்சியில், பல்லாயிரக்கணக்கான போராளிகள் கடும் போராட்டத்தை வெளிப்படுத்தினர். முக்கிய நகரமான ஹோம்ஸ் -ஐ வசமாக்கிய போராளிகள், அங்கு ராணுவத்துக்கு சொந்தமான இடங்களை தகர்த்து எறிந்தனர். போராளிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான முக்கிய போர் முனையாக இருந்தது ஹோம்ஸ் நகரம்.

தற்போது, அவர்கள் ஹோம்ஸை ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர். இந்த நகரைவிட்டு லட்சக்கணக்கணக்கான மக்கள் வெளியேறிவிட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக ஹோம்ஸ் நகரில் போராளிகள் மட்டுமே இருந்தனர். இந்நிலையில் போராளிகளுக்கும் அரசு தரப்பும் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் அடிப்படையில் அந்த நகரில் முற்றுகையிட்டிருந்த ஆயிரக்கணக்கான போராளிகள் ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு ஹோம்ஸ் நகரை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

3 ஆண்டுகளுக்குப் பின்னர் சிரியா ராணுவம் தற்போது ஹோம்ஸ் நகரை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. போராளிகள் வசம் இருந்த ஹோம்ஸ் நகரம் கைவிடப்பட்டுவிட்டதால் சிரியாவில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வர இருக்கிறது. வரும் ஜூன் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் போராளிகள் சரணடைந்திருப்பதும் ஹோம்ஸ் நகரை கைவிட்டிருப்பதும் அதிபர் ஆசாத் தரப்புக்கு மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice