ஏற்கெனவே 8கட்ட வாக்கு பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது கடைசி கட்டமாக உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 41 தொகுதிகளுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெறுகிறது.
இத்தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இன்று வாக்குப் பதிவு நடைபெறும் வாரணாசி தொகுதியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியும் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலும் போட்டியிடுகின்றனர்.