Home India Elections 2014 இறுதி கட்ட தேர்தல்: மோடி, கேஜ்ரிவால் மோதும் வாரணாசி உட்பட 41 தொகுதிகளில் இன்று வாக்குப்...

இறுதி கட்ட தேர்தல்: மோடி, கேஜ்ரிவால் மோதும் வாரணாசி உட்பட 41 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு!

603
0
SHARE
Ad

electionsடெல்லி, மே 12 – நாடாளுமன்ற தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்கு பதிவு 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி மே 12-ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே 8கட்ட வாக்கு பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது கடைசி கட்டமாக உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 41 தொகுதிகளுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெறுகிறது.

இத்தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இன்று வாக்குப் பதிவு நடைபெறும் வாரணாசி தொகுதியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியும் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலும் போட்டியிடுகின்றனர்.

#TamilSchoolmychoice

election1இதில் பீகாரில் 6 தொகுதி, உத்தரபிரதேசத்தில் 18, மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு பதிவு நடைபெற உள்ள 3 மாநிலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.