ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்கள் எடுத்திருந்தது. இந்த அணியின் டேவிர் வார்னர் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார்.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி வெற்றிப் பெற்றது. அதிரடியாக விளையாடிய அந்த அணி வீரர் யூசுப் பதான் 39 ரன்கள் எடுத்த போது, கொல்கத்தா அணி வெற்றி இலக்கை எட்டியது.
இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றி கொல்கத்தா அணியின் ஆறாவது வெற்றியாகும்.
Comments