Home இந்தியா ஐபிஎல் 7: ஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி!

ஐபிஎல் 7: ஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி!

531
0
SHARE
Ad

iplஐதராபாத், மே 19 – ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில், ஐதராபாத் அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியுள்ளது. இதனையடுத்து, தரவரிசைப்பட்டியலில் அந்த அணி 4-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்கள் எடுத்திருந்தது. இந்த அணியின் டேவிர் வார்னர் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார்.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி வெற்றிப் பெற்றது. அதிரடியாக விளையாடிய அந்த அணி வீரர் யூசுப் பதான் 39 ரன்கள் எடுத்த போது, கொல்கத்தா அணி வெற்றி இலக்கை எட்டியது.

#TamilSchoolmychoice

இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றி கொல்கத்தா அணியின் ஆறாவது வெற்றியாகும்.