Home கலை உலகம் ‘காமசூத்ரா 3டி’ ரூபேஷ் பவுல் தயாரிக்கும் MH370 பற்றிய புதிய படம்!

‘காமசூத்ரா 3டி’ ரூபேஷ் பவுல் தயாரிக்கும் MH370 பற்றிய புதிய படம்!

588
0
SHARE
Ad

rupeshpaulமும்பை, மே 19 – பிரபல ‘காமசூத்ரா 3டி’ படத்தை இயக்கிய ரூபேஷ் பவுல்  என்ற இந்திய சினிமா இயக்குநர் தனது நிறுவனத்தின் மூலம் மாயமான மலேசிய விமானம் MH370 பற்றிய படம் ஒன்றை தயாரித்துள்ளார்.

கடந்த மார்ச் 8ஆம் தேதி 239 பயணிகளுடன் காணமல் போன எம்.எச் 370 விமானம் பற்றிய கதையை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியீடு காணவிருக்கிறது.

The Vanishing Act’ எனும் பெயரைக் கொண்ட அத்திரைப்படம் இதுவரை சொல்லப்படாத கதையைச் சொல்லும் என அதன் விளம்பரங்கள் கூறுகின்றன. 

#TamilSchoolmychoice

மலேசிய பத்திரிக்கையாளர் ஒருவர் காணமல் போன மாஸ் விமானத்தில் என்ன நிகழ்ந்திருக்கக் கூடும் என்பது பற்றி எழுதிய அந்த தொகுப்பே வைத்தே இத்திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. அந்தப் பத்திகையாளரும் இப்படத்தின் ஒரு முதலீட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

35 நாட்களில் 35 லட்சம் வெள்ளி செலவில் தயாரிக்கப்படும் இப்படத்தில் 200 பேர் வரை நடிப்பார்கள் என்று தெரியவருகிறது. 

இதனிடையே, அண்மையில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.