Home இந்தியா “21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக மாற்றுவேன்” – நரேந்திர மோடி

“21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக மாற்றுவேன்” – நரேந்திர மோடி

601
0
SHARE
Ad

rajnath-modiபுதுடில்லி, மே 19 – டில்லியில் நேற்று நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் 21 ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவேன் என்றும் 125 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றிதான் இந்த தேர்தல் வெற்றி என்று டெல்லியில் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

தேர்தல் வெற்றிக்கு பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டம், டெல்லி அசோகா சாலையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்றார்.

அங்கே கூடி இருந்த தலைவர்களும், தொண்டர்களும் மோடியை மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது நரேந்திர மோடியும், கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வண்ண பலூன்களை பறக்க விட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளில்இந்தியப் பொருளாதாரம் நன்றாக வளர்ச்சியடைந்திருந்தது. ஆனால் ஒரு சில ஆண்டுகளில் அந்நிலைமை தலைகீழானது. கடந்த 2001 ஆம் ஆண்டுமுதல் குஜராத் மாநிலத்தில் ஆட்சி புரிந்து வருகிறார். அந்த மாநிலம் அவரது ஆட்சியில் நன்றாக வளர்ந்திருப்பதை கண்டு பார்வையாளர்களின் புருவங்களை உயர்த்தச் செய்தது.

குஜராத்தை முன் மாதிரியான மாநிலமாக மாற்றியதைப் போன்று இந்தியாவையும் கண்டிப்பாக நரேந்திர மோடி மாற்றுவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. சுதந்திரம் பெற்றது முதல் 67 ஆண்டுகளில் 14 ஆண்டுகளைத் தவிர இந்தியாவை ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை 44 இடங்களே கிடைத்துள்ளன.

இந்நிலையில் மோடி நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், “தாம் அனைவரையும் இந்தியர்களாக பார்க்கின்றேன். வேற்றுமையாக நடந்து கொள்ள தம்மால் முடியாது” என்று கருத்துரைத்தார்.

மேலும், “உங்கள் கடின உழைப்பால் புதிய நம்பிக்கையை கொளுந்து விட்டு எரியச் செய்ததற்காக முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு மனிதனாக, உங்கள் ஒவ்வொருவருக்கும் மோடி ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த வெற்றிக்கு மோடிதான் காரணம் என காட்டாதீர்கள். லட்சோப லட்சம் தொண்டர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த பலன்தான் இது. 1952-ம் ஆண்டிலிருந்து உழைத்து வந்த 4, 5 தலைமுறையினருக்கு கிடைத்த வெற்றி.இந்த வெற்றிக்கு முதல் உரிமை, நாட்டின் 125 கோடி மக்களுக்குத்தான் போக வேண்டும். இரண்டாவது 1952லிருந்து உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு போக வேண்டும்” என்று மோடி கூறினார்.