Home கலை உலகம் உடல்நலக் கோளாறு காரணமாக நடிகர் சோ மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக் கோளாறு காரணமாக நடிகர் சோ மருத்துவமனையில் அனுமதி!

602
0
SHARE
Ad

cho_ramaswamyசென்னை, மே 26 – கடந்த சனிக்கிழமை மூத்தப் பத்திரிகையாளரும் அரசியல்வாதியும், நடிகருமான சோ ராமசாமி (வயது 79) கடுமையான சளி மற்றும் மூச்சுத் திணறலால் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சோவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் நலம் குறித்து நடிகர்களும் அரசியல்வாதிகளும் நேரிலும் தொலைபேசியிலும் அவரை நலம் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், சிகிச்சை காரணமாக பத்திரிகையாளர் சோவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் இன்று வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice