Home கலை உலகம் நடிகர் நாசரின் மகன் தொடர்ந்து கவலைக்கிடம்!

நடிகர் நாசரின் மகன் தொடர்ந்து கவலைக்கிடம்!

604
0
SHARE
Ad

nasarசென்னை, மே 26 – கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த விபத்தொன்றில் நடிகர் நாசரின் மூத்த மகன் பைசல் பலத்த காயம் அடைந்து அவசர சிகிச்சை பிரிவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடன் பயணம் செய்த நாசரின் அக்காள் மகன் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பைசல் உட்பட மற்ற இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பைசல் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளார். அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பைசலுக்கு தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தலைசிறந்த நரம்பியல் நிபுணர் குழுவினால் இன்று அவருக்கு முக்கிய அறுவை சிகிச்சை ஒன்றை செய்யவுள்ளனர்.

#TamilSchoolmychoice

nazsharநடிகர் நாசரும் மனைவி கமீலாவும் மருத்துவமனையிலேயே இருந்து மகனின் நிலவரத்தை கவனித்து வருகிறார்கள். தொடர்ந்து 3 நாட்களாக கண்ணீர்விட்டு அழுது கொண்டிருக்கு பைசலின் தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல திரையுலகினரும் நாசரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.