Home வணிகம்/தொழில் நுட்பம் நெஸ்லே நிறுவனம் சரும பராமரிப்பு வணிகத்தில் ஈடுபடுகிறது!

நெஸ்லே நிறுவனம் சரும பராமரிப்பு வணிகத்தில் ஈடுபடுகிறது!

614
0
SHARE
Ad

Nestle-Buildingடெக்சாஸ் மே 29 – உணவுப் பொருட்களை தயாரிக்கும் புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து நிறுவனமான நெஸ்லே, தற்போது அதிகளவில் வளர்ச்சி அடைந்து வரும் சரும பராமரிப்பு வர்த்தகத்தில் ஈடுபடுகிறது.

இந்த நோக்கத்திற்காக முக அழகு சாதனங்களை உற்பத்தி செய்யும் கனடாவின் நிறுவனமான வேளியண்ட் பார்மசெட்டிக்கல் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை 1.4 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ரொக்கமாக வாங்குகின்றது.

உலகிலேயே மிகப் பெரிய உணவுத் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே சாக்லெட்டுகள், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் காப்பி பானம் ஆகிய தயாரிப்புகளில் முன்னணி நிறுவனமாக திகழ்கின்றது. ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் லோரியல் முக அழகு சாதன தயாரிப்பு நிறுவனத்துடன் வணிக ஓப்பந்தங்களில் நெஸ்லே ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

ஆய்வுகளின்படி, தற்போது அமெரிக்காவில் 2.5 பில்லியன் அமெரிக்க டாலரைக் கொண்டுள்ள முக அழகு மற்றும் பராமரிப்பு வணிகம் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்குள் 4.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சந்தையாக விரிவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனை கவனத்தில் கொண்டுதான் இந்த புதிய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு நெஸ்லே முனைப்பு காட்டுகிறது.