Home இந்தியா இனப்படுகொலை என்பதா?: ஜெயலலிதாவிற்கு இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கண்டனம்!

இனப்படுகொலை என்பதா?: ஜெயலலிதாவிற்கு இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கண்டனம்!

554
0
SHARE
Ad

imagesகொழும்பு, ஜூன் 7 – கடந்த வாரம் 3.6.2014 செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா புதுடில்லி சென்று புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர்கள் மீது  தாக்குதல், மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு போன்றவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனிடையே, இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டிருப்பதற்கு அந்நாட்டு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.

#TamilSchoolmychoice

இது குறித்து இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகையில், “இலங்கையில் நடந்த போர் சம்பவங்களை இனப்படுகொலை என கடுமையான வார்த்தைகளால் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக இலங்கையின் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கண்டனம் முறைப்படி இந்திய அரசிடம் தெரிவிக்கப்படும் என்றார். இந்தியாவில் வலிமையான அரசு அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மத்திய அரசுக்கு முன்பைப் போல் ஜெயலலிதாவின் தயவு தேவையில்லை என்பதால், நியாயத்தின் பக்கம் நின்று இலங்கைக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டை நரேந்திர மோடி எடுப்பார் என நம்புகிறோம் என்று தெரிவித்தார்.