Home உலகம் ஆப்கன் அதிபர் வேட்பாளர் அப்துல்லா மீது கண்ணிவெடித் தாக்குதல்!

ஆப்கன் அதிபர் வேட்பாளர் அப்துல்லா மீது கண்ணிவெடித் தாக்குதல்!

544
0
SHARE
Ad

abd

காபூல், ஜூன் 7 – ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் அப்துல்லா  மீது நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

ஆப்கன் அதிபருக்கான இரண்டாம் கட்ட தேர்தல் ஜூன் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்புக்குரிய வேட்பாளராக கருதப்படும் அப்துல்லா அப்துல்லா நேற்று தலைநகர் காபூலில் பிரசாரம் செய்தார்.

#TamilSchoolmychoice

ஒரு இடத்தில் பேசி விட்டு, மற்றொரு பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக அவர் காரில் சென்ற போது, சாலையில் பதித்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி திடீரென்று வெடித்து சிதறியது.

_75346681_022567247-1

அதிர்ஷ்டவசமாக அப்துல்லா அப்துல்லாவின் கார் சில நொடிகள் முன்னதாக அப்பகுதியை கடந்ததால் அவர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். எனினும், அவரது வாகன அணிவகுப்பில் வந்த கார்கள் தூக்கி வீசப்பட்டு, தீப்பற்றி எரிந்தன.

அவரது மெய்க்காப்பாளர்களில் சிலர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.