கோலாலம்பூர், ஜூன் 10 – தியோமான் தீவில் காணாமல் போன பிரிட்டிஷ் குடிமகன் கேரத் டேவிட் ஹண்ட்லியின் சடலம் கடந்த ஜூன் 4ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.
தற்போது இவரது உடலை இறுதிச் சடங்குகளுக்காக பிரிட்டனுக்கு அனுப்பும் பணியில் பிரிட்டிஷ் தூதரகம் ஈடுபட்டுள்ளது.
நேற்று குவந்தானில் உள்ள துங்கு அம்புவான் அப்ஸான் மருத்துவமனையிலிருந்து அவரது உடல் பிற்பகல் 1.30 மணியளவில் சவ அடக்க நிறுவனம் ஒன்றினால் எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது கேரத் ஹண்ட்லியின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அருகில் இருக்கவில்லை.
கோலாலம்பூருக்கு விமானம் மூலம் அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, இன்று அவரது தாய்நாடான பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிகிறது.
கடந்த மே 27ஆம் தேதி காணாமல் போனதாக அவர் அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் ஜூன் 4 ஆம் தேதி அழுகிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் பிரேத பரிசோதனைகள் மற்றும் மரபணு பரிசோதனைகள் ஆகியவற்றின் மூலம் இறந்தது ஹேரத் ஹண்ட்லி தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால், அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.