Home World Cup Soccer 2014 ஸ்பெயின் அணியே மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் – பிரதமர் நம்பிக்கை

ஸ்பெயின் அணியே மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் – பிரதமர் நம்பிக்கை

623
0
SHARE
Ad

Team Spain

கோலாலம்பூர், ஜூன் 10 – கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பையில் நடப்புச் சாம்பியனான ஸ்பெயினே இந்த 20 -வது உலகக் கோப்பையை வெல்லும் என்று பிரதமர் நேற்று கோலாலம்பூர் நடைபெற்ற இன்வெஸ்ட் மலேசியா எனும் முதலீட்டுத் திட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

32 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி வரும் ஜூன் 12 – ம் தேதி தொடங்கி ஜூலை 13 -ம் தேதி வரை பிரேசிலில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்தக் காற்பந்து போட்டியில் உலகின் தலைசிறந்த அணிகள் களம் காண்கின்றன.

#TamilSchoolmychoice

இந்த காற்பந்து போட்டி குறித்து பொதுமக்கள் பல்வேறு கனிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனக்கு மிகவும் பிடித்த அணி இங்கிலாந்து தான் என்றும், ஆனால் இந்த முறை இங்கிலாந்தை விட ஸ்பெயின் அணி தான் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

லா ரோஜா எனும் புகழுக்குரிய ஸ்பெயினே மீண்டும் 2014 -ம் ஆண்டு கிண்ணத்தை வென்று வரலாறு படைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 2010 -ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் திறமையோடு விளையாடி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இம்முறையும் ஸ்பேயினே வெற்றி வாகைசூடும்.

பிரேசில் அணியின் ஆட்டத்திறன் தமக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், ஸ்பெயின் அணிதான் உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று அவர் மேலும் கூறினார்.