Home கலை உலகம் விக்ரம் நடித்த “ஐ’’ படத்தை வாங்க போட்டி போடும் விநியோகஸ்தர்கள்!

விக்ரம் நடித்த “ஐ’’ படத்தை வாங்க போட்டி போடும் விநியோகஸ்தர்கள்!

513
0
SHARE
Ad

aiசென்னை, ஜூன் 10 – ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ‘ஐ’ படத்தில் நடித்து வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்துள்ளது.

இதில் விக்ரம் உடல் மெலிந்து ஒல்லியாக வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார்.  இதில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார். சுரேஷ்கோபி, சந்தானம் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

aiiபி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. தற்போது இப்படம் வெளியாவதற்கு தயாராகி விட்டது. தற்போது இப்படத்தை விக்ரம் முடித்து விட்ட நிலையில் விஜய் மில்டன் இயக்கும் படத்துக்கு வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே ‘கோலிசோடா’ வெற்றி படத்தை விஜய் மில்டன் கொடுத்தார். எனவே விக்ரம் படத்துக்கு ஏக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் “ஐ” படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறதாம். 120கோடி வரை விலை பேசப்பட்டுள்ளது என்கின்றனர்.