Home நாடு “மந்திரி பெசாரின் ஆலோசனைபடி நியமனங்கள் இருக்கும் – மாநில விவகாரங்களில் தலையிடமாட்டேன்” – ஜோகூர் சுல்தான்

“மந்திரி பெசாரின் ஆலோசனைபடி நியமனங்கள் இருக்கும் – மாநில விவகாரங்களில் தலையிடமாட்டேன்” – ஜோகூர் சுல்தான்

536
0
SHARE
Ad

sultan-johor1ஜோகூர், ஜூன் 13 – மாநில நிர்வாகத்தில் தாம் எந்தவொரு விஷயத்திலும் தலையிடப் போவதில்லை என்று ஜோகூர் மாநில சுல்தான் இஸ்கண்டார் அறிவித்துள்ளார்.

ஜோகூர், வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் அமைப்பது தொடர்பான இந்த சட்ட மசோதாவில் செய்யப்பட்ட சில மாற்றங்களில், ஜோகூர் சுல்தானுக்கு நிர்வாக அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருந்தது.

இதனால் நாடு முழுவதிலும் அரசியல்வாதிகளிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும், சட்ட வல்லுநர்களிடமிருந்தும் பலத்த கண்டனங்கள் எழுந்தன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஜோகூர் வீடமைப்பு, சொத்து வாரிய சட்ட வரைவு கூட மந்திரி பெசாரின் ஆலோசனை பெறுவதைத்தான் வலியுறுத்துகிறது என்று ஜோகூர் சுல்தான் என்.எஸ்.டி. ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தனது பேட்டியில் சுல்தான் இஸ்கண்டார் கூறியிருப்பதாவது:-

“அந்த சட்டவரைவுப்படி, அவ்வாரிய உறுப்பினர்கள் நால்வரை நியமிக்கும் அதிகாரம் சுல்தானுக்கு உண்டு. ஆனால், மந்திரி பெசாரின் ஆலோசனையைக் கேட்டுத்தான் அந்த நியமனங்களைச் செய்ய முடியும். மாநில விவகாரத்தில் எனது தலையீடு இருக்காது. இதை ஜோகூர் குடிமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சட்ட வரைவு மீது அவர்களுக்கு நம்பிக்கை உண்டாக வேண்டும்” இவ்வாறு சுல்தான் கூறியுள்ளார்.