கோலாலம்பூர், ஜூன் 13 – குழந்தையை யார் வளர்ப்பது என்ற பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் கூட்டரசுப் பிரதேச நீதிமன்றத்தை நாடுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்திற்கு மதம் மாறிய கணவரிடமிருந்து மகளை மீட்டு தாயார் இந்திராகாந்தியிடம் ஒப்படைக்குமாறு ஈப்போ உயர்நீதிமன்றம் நேற்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஈப்போவில் இந்திராகாந்தியும், நெகிரி செம்பிலானில் தீபாவும் இஸ்லாத்திற்கு மாறிய தந்தையிடமிருந்து தங்களது பிள்ளைகளை மீட்டுத்தர நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இவ்விவகாரத்தில் கூட்டரசு நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என்று தாமும் அரசாங்கமும் நம்புவதாக நஜிப் தெரிவித்தார்.
சட்டத்துறை தலைவர், குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து நீதிமன்ற தீர்ப்பை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
எனவே, கூட்டரசு நீதிமன்ற முடிவை அனைத்துத் தரப்பும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.