Home வாழ் நலம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்!

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்!

941
0
SHARE
Ad

tokadoஜூன் 13 – பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. வடக்கு மெக்ஸிகோவும், வட அமெரிக்காவும் இதன் தாயகமாகும். நீண்ட, மத்திய, குட்டை எனப் பல வகைகள் பீர்க்கனில் உண்டு.

உலகில் அமெரிக்கர்கள் பீர்க்கன்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள். அவர்கள் சாப்பிடும் லூஃபா அக்யுட்ஆங்குலா (Luffa Acutangula) என்ற வகைப் பீர்க்குதான் எல்லா நாடுகளிலும் பிரபலம்.

முற்றிய பிறகு தான் பீர்க்கங்காயைச் சமையலில் சேர்க்க வேண்டும். காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம் போன்றவை தோன்றும்! சளிக் கோளாறுகளும் தோன்றும்.

#TamilSchoolmychoice

100 கிராம் பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது. கால்சியம் 40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச் சத்து 1.6 மி.கிராமும், வைட்டமின் ‘ஏ’ 56 அகில உலக அலகும், ரிஃபோபிளவின் 0.01 மி.கிராமும், தயாமின் 0.07 மி. கிராமும், நிகோடின் அமிலம் 0.2 மி.கிராமும், வைட்டமின் 5 மி.கிராமும் உள்ளன.

நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.

birkangai100 கிராம் பீர்க்கனில் கிடைக்கும் கலோரி 18 தான். எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.முற்றிய பீர்க்கனில் லுஃபின் (Luffin) என்னும் கசப்புப் பொருள் இருக்கிறது.

பீர்க்கனின் விதைகளில் ஒரு விதமான நறுமண எண்ணெய் இருக்கிறது. நார்ச்சத்தும் உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக்கொள்ளக்கூடிய மாவுச்சத்தும் பீர்க்கனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும். இதன் பொருட்டே பீர்க்கன் கொடியின் இலைகள், வேர், விதைகள் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையாகத் திகழ்கின்றன.

சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும். இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.